நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (30) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்காக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


போதைப்பாவனைக்கு எதிராக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு - மருந்தகக் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் தலைவர...
வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல் - கல்வியங்காடு பகுதியில் சம்...
புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாடு – பெண்கள் குழுவால் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாபப் பலி!