ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு துபாயில் ஆரம்பம் !

Thursday, November 30th, 2023

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று துபாய் சென்றுள்ளார்.

குறித்த விஜயம் நேற்றைக்கு அமைந்திருந்தாலும் நேற்று அவரால் இந்த விஜயத்தை மேற்கொள்ள முடியவில்லை .

அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்றுமுதல் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை டுபாய் எக்ஸ்போ சிட்டியில் அரசுத் தலைவர்கள், பொது மற்றும் தனியார்துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய மற்றும் வளரும் நாடுகளுக்கான காலநிலை நீதி மன்றத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட மூன்று முன்மொழிவுகளை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106