கடந்த 10 மாதங்களில் 1,250 தொழுநோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Monday, November 27th, 2023
நாட்டில் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 1,250 தொழுநோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தொழுநோயாளர்களில் 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர்கள் அடங்குவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 256 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 138 பேரும், மட்டக்களப்பில் 128 பேரும் களுத்துறையில் 92 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள தொழுநோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்
ஜூலை 31முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீள ஆரம்பம்!
அமைச்சர் அலி சப்ரி இந்த வாரம் ருமேனியா மற்றும் போலந்திற்கு நான்கு நாள் விஜயம் - புக்கரெஸ்டில் புதிய ...
|
|
|


