அரச நிலங்கள் விவசாயிகளுக்கு – வாழ்வாதாரங்களை அதிகரிக பெரும் வாய்ப்பாக அமையும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
Saturday, November 18th, 2023
விவசாயத்துறை வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, அரச விவசாய காணி நிலங்களை விவசாய மக்களுக்கே உரித்தாக்கிக் கொடுப்பது, கல்வியினை இலக்காகக் கொண்ட விவசாயத்துறையினை நவீனமயப்படுத்துவது, கமநல சேவைகள் நிலையங்களை விவசாய நவீனத்துவ கேந்திர நிலையங்களாக மாற்றி அமைப்பது, குளங்களை புனரமைப்புச் செய்தல் போன்ற ஏற்பாடுகளும், தனியார்த் துறையினருடன் இணைந்த பாலுற்பத்தி மேம்பாடு போன்ற ஏற்பாடுகளும் எமது மக்களின் வாழ்வாதாரங்களை அதிகரித்துக் கொள்வதற்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
காணி, நிலமற்ற மக்களாகக் கருதப்படுகின்ற மலையக மக்களுக்கு காணி உரிமங்களை வழங்குவதற்கென 4 பில்லியன் ரூபாவினை ஒதுக்கி, அம்களுக்கும் காணி, நிலங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
மேலும், மலையகப் பகுதிகளை இலக்காகக் கொண்ட ‘பத்து வருட மலையகத்’ திட்டம் (கந்துகர தசகய), நிலச் சக்தி திட்டம் (பிம்சவிய), நகர வீட்டு உரிமம் திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், குடிநீர்த் திட்டங்களுக்கான முன்னுரிமை என அனைத்துத் திட்டங்களும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106