உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Wednesday, November 15th, 2023
உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விரைவில் தரநிலை சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு முன்பாக பிரதமர் தினேஷ் குணவர்தன இது குறித்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்சித் தலைவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் போது குறித்த சட்டமூலத்துக்கு தேவையான திருத்தங்களை பிரதமர் மேற்கொள்வார் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சிலரது தவறான நடைமுறை - நாடாளுமன்றத்தின் கௌரவத்திற்கு இழுக்கு - சபாநாயகர்!
அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று பிரதமர் தலைமையில் ஆரம்பம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்...
|
|
|


