பிரதிநிதிகள் அனைவருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, November 2nd, 2023

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருதான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – வெறுமனே உசுப்பேற்றும் அரசியலை பேசுவதுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்கும் வகையிலேயே பெரும்பலான மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனபப்படையில் இவ்விடயம் தொடர்பில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தி, எம்மால் முன்னெடுக்கப்படும்  சரியான வேலைத்திட்டங்களோடு மக்களை அணி திரட்ட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

000

Related posts:

இலஞ்சம் ஊழல் எழுதப்படாத சட்டமாகவே இருக்கின்றது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்...
எமது கடல் வள பாதுகாப்பு , தொழிலாளர்களின் வாழ்வு மேம்பாட்டுக்காகவே - புதிய சட்டத் திருத்தம் - மாற்று...
கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள் - அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையா...

இரணைமடு நீர்த்திட்டம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்திருக்கும் நிலைப்பாடு சக தமிழ் கட்சித் தல...
அதிகரித்து வரும் வாகன விபத்துக் குறித்து அவதானம் செலுத்தவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியு...
நிலைபேறான பொருளாதார கட்டமைப்பிற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.- ஜப்பான் தூதுவரிம் அமைச்ச...