கிளிநொச்சி குடமுருட்டிக்குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்தள்ளதாக விவசாயிகள் விசனம்!

Thursday, October 26th, 2023

கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குடமுருட்டிக்குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்தள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

8 அடி ஆறு அங்குலம் அடைவு மட்டம் கொண்ட குடமுருட்டி குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்து காணப்படுவதால் மழைக்காலங்களில் குளத்தின் அணைக்கட்டு உடைக்கும் சாத்தியம் காணப்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அணைக்கட்டை புனரமைத்துத் தருமாறு பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவாசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் விவசாயிகள் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் இணைந்து அணைக்கட்டை பாதுகாக்கும் நோக்கில் மண் மூடைகள் அடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள்; கூறியுள்ளனர்.

அணைக்கட்டு புனரமைக்கப்படும் பட்சத்தில் இக் குளத்தின் கீழ் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை - சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானம் ...
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற மாணவர்களில் 80 வீத வருகைப் பதிவு கவனத்தில் கொள்ளப்படம...
எகிப்தில் நடைபெறும் ஐ.நாவின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

போதைப் பாவனையால் இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் நால்வர் உயிரிழப்பு - தேசிய புகையிலை மற்றும் ம...
பிரதமர் ரணிலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – விரைவில் இந்தியா செல்லவுள்ளதாகவும் தக...
நுண்கடன் நிறுவனங்களால் நாட்டில் 30 இலட்சம் பேர் அவதி - இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சு...