நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல்போன நெற் தொகுதி தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு வலியுறுத்து!

Tuesday, October 24th, 2023

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல் போன நெற் தொகுதி தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை விவசாய அமைச்சரால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்பிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகளில் இருந்து பல கட்டங்களாக கொள்வனவு செய்யப்பட்ட நெல் காணாமல்போனமை தொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டுக்கமைய குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஆசிரியர் உயிரிழப்பு: அதிபர் மீது குற்றச்சாட்டு - விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழர் ஆசிரியர் சங்கம் ...
வறிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு வலிந்து செய்து சேவையாற்றுபவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.பி.டி.பியின் யா...
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் ஜானக வக...