மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் – மின்சக்தி அமைச்சர் அறிவிப்பு!
Monday, October 23rd, 2023
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
ஆண்டுக்கு 2 முறை மட்டுமே மின்சார சபையில் திருத்தங்களைச் செய்ய முடியும் என்ற தவறான கருத்து சமூகத்தில் உள்ளது.
அது வழக்கமான அடிப்படையில் செய்யப்படுவதில்லை. முதல் தடவை அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படும் போது, அவசர சூழ்நிலைகளில் கோரிக்கைகளை முன்வைக்க மின்சார சபைக்கு முடியும்.
அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. குறித்த நடைமுறையை பயன்படுத்தியே இதனை நாம் செய்துள்ளோம். என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து
000
Related posts:
25,000 தண்டம் தொடர்ந்தும் தாமதம்!
விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம்: சட்ட ரீதியிலான அனுமதி!
கிளிநொச்சியில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!
|
|
|


