23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கை வந்த வெளிநாட்டு பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
Monday, October 23rd, 2023
இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மிகவும் நுட்பமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான இந்தோனேசிய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து கட்டார் டோஹா ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.
ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைகளுக்கு இடையில் நுட்பமான முறையில் மறைத்து வைத்து 4598 கிராம் கொக்கைன் போதைப்பொருளைக் கொண்டு வந்துள்ளார் .
நேற்று மதியம் 04.10 மணியளவில் QR 654 என்ற Qatar Airways விமானத்தில் அவர் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள அலுவலகம் இடமாற்றம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி!
அடையாளம் தெரியாத ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்ட வடகொரியா -அச்சத்தில் உலக நாடுகள்!
|
|
|


