தெல்லிப்பழை விபத்தில் ஒருவர் பலி!
Thursday, September 8th, 2016
தெல்லிப்பழை, மதவடிப் பகுதியில் நேற்றுபு (07) மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.டி.எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.
இளவாலை பகுதியைச் சேர்ந்த ஜே.திலீப்குமார் (வயது 33) என்பவர் உயிரிழந்ததுடன், சருண் (வயது 26) என்பவர் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி, அருகிலிருந்த கடைக்குள்ளும் புகுந்துள்ளது. உயிரிழந்தவர், தனது சகோதரியில் திருமண நிகழ்வுக்காக இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் - விவசாயிகள்!
பிளாஸ்டிக் பொலித்தீன் தடைக்கு மாற்று வழிமுறைகளை கண்டறிய நனோ தொழில்நுட்பம் அவசியம் - அமைச்சர் மஹிந்த ...
யாழ்.பல்கலையில் இம்முறை 2500 பேருக்கு பட்டமளிக்க ஏற்பாடு!
|
|
|


