கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின பதவியேற்பு!
Thursday, October 12th, 2023
கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின இன்றையதினம் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை இடம் பெற்றது.
சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்று மதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் வைபவ ரீதியாக காலை 10.00மணி அளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மினுவன்கொட கொரேனா கொத்தணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது - இராணுவத் தளபதி தெரிவிப்பு!
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என்ற தீர்மானத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கம் கண்டனம்...
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை விஜயம் - கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் அவதானம் ...
|
|
|


