காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை!
Thursday, October 5th, 2023
நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.
உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைய நாட்களில் ஏற்பட்ட வரட்சி காரணமாக 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல மாகாணங்களில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு அருகில் இருந்த சுமார் நூறு ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளன தாழ்நிலங்களில் பெய்து வரும் மழையினால் மரக்கறிச் செய்கைகளும் அழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையுடன் ஜெர்மன் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்து!
இலங்கையின் முடக்கநிலை தளர்த்தப்பட்டதன் விளைவு 14 நாட்களுக்கு பின்னரே தெரியும் - சமுதாய மருத்துவ நிபு...
நெருக்கடியான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை - புகையிரத ...
|
|
|


