உயர்தரப் பரீட்சைக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Wednesday, October 4th, 2023
உயர்தரப் பரீட்சைக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது திருத்தியமைக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் 3ஆயிரம் இருதய நோயாளர்கள்!
ஈ - உள்ளுராட்சி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள உள்ளுராட்சி சபைகள்!
நிலுவையில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் - அமைச்சர் தலதா அதுகோரள!
|
|
|


