அதிகாரிகள் மோசடி – சோமாலியாவுக்கான உதவியை, தற்காலிகமாக இடைநிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் !
Tuesday, September 19th, 2023
உலக உணவுத் திட்டத்தின் கீழ் சோமாலியாவுக்கான உதவியை, ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
கடுமையான பஞ்சத்தை தவிர்க்கும் வகையில் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உதவிகளை, சோமாலிய அதிகாரிகள் மோசடி செய்துள்ளமை ஐக்கிய நாடுகளின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சோமாலியாவுக்கான உதவியினை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை - வலுசக்தி மற்ற...
கோப்பாய் - கைதடி வீதியில் கோர விபத்து - அரச அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!
பாடசாலை மாணவி அம்ஷி தற்கொலை - சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில்!
|
|
|


