அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் ரமேஸ் பத்திரன பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!

Friday, September 1st, 2023

கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

குறித்த கண்காட்சி கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, முதலீடு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவுள்ளதாக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொறியியல்துறை பணிப்பாளர் நிஷாந்த வீரதுங்க தெரிவித்தார்.

வட மாகாணம் பாரிய நிலப்பரப்பை கொண்டுள்ள போதிலும், மொத்த தேசிய உற்பத்தியில் சிறிய பங்களிப்பையே வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, அதனை அதிகரிப்பதற்கான தெளிவுப்படுத்தல்களை இந்த கண்காட்சியின் ஊடாக வழங்குவதற்கு தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தின் பிரதானி  ராகேஸ் நடராஜன் உட்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து இன்றுமுதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106