இரண்டு உலங்கு வாநூர்திகளில் இருந்த 6 யுக்ரைனிய படையினர் கொலை – யுக்ரைன் இராணுவம் அறிவிப்பு!

Thursday, August 31st, 2023

கிழக்கு யுக்ரைனில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, இரண்டு உலங்கு வாநூர்திகளில் இருந்த 6 யுக்ரைனிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.

குறித்த அறுவரும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு யுக்ரைன் நகரமான பாக்முட்டில் பணியாற்றியதாக யுக்ரைன் இராணுவத்தின் டெலிகிராம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டொனெட்ஸ்க் – பாக்முட்டின் பகுதியில், ரஷ்யா – யுக்ரைன் போரின் முக்கிய இடமாக கருதப்படுகிறது.

இரண்டு உலங்கு வாநூர்திகளும் அழிக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தநிலையில், இன்று மத்திய நகரமான பொல்டாவாவில் யுக்ரைனின் ஆண்களுக்கான விசேட சேவை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் அடையாளங்கள் பகிரங்கப்படுத்தப்படமாட்டாது எனவும் யுக்ரைனிய தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106