உலக சுகாதார நிறுவனம் ஜனாதிபதிக்கு விசேட விருது வழங்கி கௌரவித்தது!
Tuesday, September 6th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் விசேட விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
தென்கிழக்காசிய பிராந்திய பொதுச் சுகாதார மேம்பாட்டு சிறப்பு விருதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பணிப்பாளர் கலாநிதி பூனம் சிங் நேற்று (5) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இலங்கையின் சுகாதார மேம்பாட்டிற்கான ஜனாதிபதி ஆற்றிய பங்களிப்பை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மதுபானம், சிகரெட் போன்றவற்றை முறையாக கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை இதன் போது கலாநிதி சிங் பாராட்டி உரைநிகழ்த்தினார்.

Related posts:
'யாஸ்' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்!
பேருந்துகளுக்கான தண்டப்பணம் 5 இலட்சம் வரை உயரும் - அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை!
தற்போது நிலவும் வறட்சி காரணமாக 46 ஆயிரத்து 904 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவு - விவசாய அமைச்சு தெரிவ...
|
|
|


