ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Monday, August 14th, 2023
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜப்பான் நாட்டு கலந்துரையாடலுக்குச் செல்ல யாழ் மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் பதிவு!
இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று!
இந்தியாவின் ஒத்துழைப்பு உயர்மட்டத்திலும் வரவேற்கத்தக்கதாவும் உள்ளது - போக்குவரத்து துறை அமைச்சர் பந்...
|
|
|


