யாழ்ப்பாணத்தில் 69 ஆயிரம் பேருக்கு குடிநீர் இல்லை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தகவல்!
Friday, August 11th, 2023
யாழ்ப்பாணத்தில் 69,113 பேருக்கு குடிநீர் இல்லமால் அல்லல்படுகின்றனர் என யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு , ஊர்காவற்துறை , சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 21 ஆயிரத்து, 714 குடும்பங்களை சேர்ந்த 69 ஆயிரத்து 113 பேர் குடிநீர் இல்லாமல் அல்லல்பட்டு வரும் நிலையில் குறித்த பிரதேச செயலர்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதி மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை யாழில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் மழை பெய்யா விடின் நிலைமை மேலும் மோசமாகும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கான புதிய இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் பதவிளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்!
கொரோனா தொற்று: பாஸ்டரின் தகவலை சுவிஸ்லாந்து அரசு ஊடாக பெற்றுக் கொண்ட இலங்கை!
வாழ்க்கைச் செலவு தொடர்பாக அமைச்சரவை உப குழு நியமனம்!
|
|
|


