கந்தானை தீப்பரவல் – சுவாசப் பாதிப்பினால் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
Tuesday, August 8th, 2023
கந்தானை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து புகை காரணமாக ஏற்பட்ட சுவாசக்கோளாறினால் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தானை புனித செபஸ்தியார் கல்லூரி மாணவிகளே இவ்வாறு அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், தீப்பரவலுக்கான உரிய காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கந்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்க அரசுடனான ஒப்பந்தம் இலங்கையைப் போர்ப் பூமியாக்கும் - தயாசிறி ஜெயசேகர!
இலங்கையர்கள் உள்ளிட்ட 960 பேருக்கு தடை - இந்தியா!
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்...
|
|
|


