உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தில் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, August 8th, 2023

சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தில் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி சமனல குளத்தின் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும்.

இந்த நிலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்யாவிட்டால் மாத்தறை, காலி, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூன்று மணிநேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

எங்கள் பகுதியில் இருந்து தண்ணீர் திறக்காவிட்டால், மின் உற்பத்திக்கு பிரச்சினை இல்லை என்றபோதும் தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஆகஸ்ட் 15 முதல் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் மின்சாரம் கொள்வனவு செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து ஆராயப்படுகிறது - விரைவில் தீர்வு காணப்படும் என...
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வு - கல்வி அமைச்சர் அறிவிப்ப...
பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த  டொனால்ட் ட்ரம்ப் தீர்மானம்!