யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவை மையமாகக் கொண்டு வடக்கில் பாரிய திட்டம் – அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவிப்பு!

Wednesday, August 2nd, 2023

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்..

ஜனாதிபதி ஊடக மையத்தில் 2 ஆம் திகதி புதன்கிழடை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு  வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


மருமகனுக்காக வடக்கு அபிவிருத்தியை பேரம் பேசிய விக்கி - நியமனம் கிடைக்காததால் ஆயிரம் மில்லியனை தடுத்த...
தீர்வு கிடைக்காத நிலையில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்...
உரிமைகளை தர பின்னடிக்கின்றது அனுர அரசு - யாழ் பல்கலையில் ஆசிரியர் சங்கம் வீதிக்கிறங்கி போராட்டம்!