நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது சினோபெக் நிறுவனம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Tuesday, August 1st, 2023
இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசித்துள்ள, சீனாவின் சினோபெக் நிறுவனம், முதலாவது எரிபொருள் கப்பலில் இருந்து, எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டாவது எரிபொருள் தொகுதி நாளை வரவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சந்தையில் புதிய சில்லறை விற்பனையாளர்களின் நுழைவு பெற்றோலியப் பொருள்களுக்கான அந்நியச் செலாவணி தேவைகளை எளிதாக்கும் என்று எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு இறுதி செய்யப்பட்டதன் பின்னர் நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
Related posts:
இந்த மாத இறுதிக்குள் இலங்கை அணி வீரர்களின் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்!
பொது மக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் இராஜாஜி அரங்கத்தில்!
வடக்கில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!
|
|
|


