பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் 10 வீதத்தால் குறைக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!
Friday, July 28th, 2023
பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்தப்பொருட்களின் விலைகளை 10% குறைக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாடசாலை பாதணிகள் மற்றும் பைகள் உற்பத்தியாளர்களுடன் இன்று நிதியமைச்சில் நடத்திய நீண்ட கலந்துரையாடலின் பின்னரே உற்பத்தியாளர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கருத்து தெரிவித்த உற்பத்தியாளர்கள், தற்போது சந்தையில் உள்ள தொகையும் புதிய விலை திருத்தத்தின் கீழ் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அந்த நன்மையை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நீதிமன்றிற்கு செல்லலாம்- பைசர் முஸ்தபா!
அனைத்து பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாணவர் அடையாளக் குறியீடு அறிமுக - கல்வ...
நவம்பர் 10 ஆம் திகதிஉயர்தரப் பரீட்சை ஆரம்பம் - 2362 மையங்களில் தேர்வு நடைபெறும் என பரீட்சைத் திணைக்...
|
|
|


