20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் சுட்டிக்காட்டு!
Thursday, July 27th, 2023
சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
சில உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வாக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஏனைய அதிகாரிகளின் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தமிழ்மக்களின் அரசியல் அதிகாரத்தை முடக்கி ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கின்றது கூட்டமைப்பு
மாலைத்தீவில் இலங்கை பல்கலைக்கழக வளாகங்கள் !
இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்ச...
|
|
|


