துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டார் பிரேசில் ஜனாதிபதி!

Saturday, July 22nd, 2023

பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலில் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களின் இருப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் ஒன்பது மில்லிமீட்டர் துப்பாக்கிகள் உட்பட சில ஆயுதங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனமொன்று நடத்திய விசாரணையில், 2022ஆம் ஆண்டில் நாட்டில் ஒரு மணி நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கொலைகள் பதிவாவதாக தெரியவந்துள்ளது.

மேலும், சமீபகாலமாக பாடசாலைகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 இல் ஒரு இலட்சத்து இருபதாயிரமாக இருந்த உரிமை கொண்டவர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட எட்டு மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி லுலாட சில்வாவின் தேர்தல் வாக்குறுதிகளில் துப்பாக்கிக் கட்டுப்பாடு முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடப்பட்டிருந்தது.

000

Related posts:

ஜனவரி 17 இல் 2023 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில...
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டாம் - நீதிவான்களுக்கு அறிவிப...
தேர்தல் பிரசாரங்களுக்கு தனியார் பேருந்து வழங்கப்பட்டாலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட அனுமதிக்கப்படாது - தனி...