பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சு அறிவிப்பு!.
Sunday, July 16th, 2023
எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த பெரும் போகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களுக்கு பதிலாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பொது மக்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை தனியார் அல்லது அரச உரக் கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்யலாம் என மஹிந்த அமரவீர தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வி...
பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படும் – சுகாதார அமைச்சு...
யாழ் - சிறைச்சாலையில் புனரமைப்பு செய்யப்பட்ட கலந்துரையாடல் மண்டபம் சிறைச்சாலை ஆணையாளரால் திறந்துவைப்...
|
|
|
பாடசாலைகளுக்கு வருகை தர விரும்பும் ஆசிரியர்களை தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படு...
30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் - புதிய வலுசக்தி அமைச்சர் கா...
அரைசொகுசு பேருந்து சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 430 அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய நீதிமன்றம் இடை...


