அனுமதிக்கப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!
Friday, July 14th, 2023
நாரா நிறுவனத்தினால் அனுமதிக்கப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், உள்ளூர் இழுவைப் படகுகளினால் பாதிப்பு ஏற்படுவதாக பிரதேச கடற்றொழிலாளர்கள் முறையிட்ட நிலையிலேயே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் முகவர் நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட சேற்று நிலப் பகுதிகளில் மாத்திரம் மீன்ப் பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு உள்ளூர் இழுவைப் படகுகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீட்டுத்த திட்டத்தால் கடனாளிகளானவர்களுக்கு நிவாரணம் வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலிய...
சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|
|
மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் - செயலாளர் நாயகம் டக்ள...
பொருளாதார மீட்சி என்று கூறி மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் - டக்ளஸ் எம...
இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில் முறையாகக் கிடைப்பதில்லை என மக்கள் கவலை – டக்ளஸ் எ...


