டெங்குத் தொற்று அதிகரிப்பு – இவ்வாண்டு 33 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
Thursday, July 13th, 2023
இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, 52 ஆயிரத்து 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 25 ஆயிரத்து 944 இற்கும் அதிகளவானோர் டெங்கு நோயுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று 13 ஆம் திகதி முதல் 61 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
30 வருடங்களுக்கும் மேலாகப் புனரமைக்கப்படாது கிடக்கும் சுன்னாகம் மேற்கு கணக்கர் வளவு வீதி!
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையர்களுக்கு கொரோனா !
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில்இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் பொதுமக்கள் அவதி!
|
|
|


