பேருந்து விபத்தில் 38 பேர் பலி -ஆப்கானிஸ்தானில் பரிதாபம்!
Sunday, September 4th, 2016
ஆப்கானிஸ்தானில் கொள்கலன் லொறியுடன் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கந்தஹார் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று காலை பயணிகளுடன் சென்ற பேருந்து சாபுல் மாகாணம் வழியாக சென்றபோது எதிர்திசையில் வேகமாக வந்த பெற்றோல் கொள்கலன் லொறியுடன் மோதுண்டது.
இந்த கோர விபத்தில் 38 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
பிரிக்ஸ் சர்வதேச மாநாடு ஒத்திவைக்கப்பட்டது - பிரிக்ஸ் சர்வதேச மாநாடு - உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விட...
இலங்கையுடன் நெருக்கமாகும் ஐரோப்பா - இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை!
கடந்தகால போர்களை போலவே ஹமபஸ் – இஸ்ரேல் போரிலும் வெகுவாக பாதிக்கப்படுவது குழந்தைகளே - யுனிசெஃப்பின் ...
|
|
|


