கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஒக்டோபருக்குள் நிறைவுசெய்யப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்பார்ப்பு!

Sunday, May 28th, 2023

கடன் மறுசீரமைப்பு தொடர்பில், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுசெய்ய விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்த நாட்டின் ஊடகமொன்றுக்கு நேற்று கருத்து வெளியிட்டபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம், பாதீட்டை முன்வைப்பதற்கு முன்னர் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதில் அனைவரும் இணைய வேண்டும் எனத் தாங்கள் முன்மொழிவதாக ஜனாதிபதி கூறியுள்ளதுடன், சீனாவும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை- தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரி...
ஜீவன் - பவித்ராவுக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் - ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்க...