“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை.- தனித்தனியே நினைவேந்துங்கள் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கோரிக்கை!
Tuesday, May 16th, 2023
போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை. நினைவேந்தல் காலங்களில் விடுதலைப் புலிகளையும் நினைவேந்துவதால்தான் சிக்கல் நிலை ஏற்படுகின்றது. தடைகளும் வருகின்றன.
தமிழ் மக்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவது போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள். அதைவிடுத்து புலிப்பயங்கரவாதிகளை நினைவேந்தும் நிகழ்ச்சி நிரலுக்குள் நீங்களும் பங்கேற்று உங்கள் உறவுகளை நினைவேந்துவதைத் தவறவிடாதீர்கள்” என்றுமு; தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106