மின்சாரம் தொடர்பில் விரைவில் புதிய மின்சார சட்டமூலம் – நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என துறைசார் அமைச்சர் அறிவிப்பு!!
Monday, May 15th, 2023
மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது சம்பந்தமான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதோடு பின்னர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எனக்கு எதிராக மக்கள் போராடவில்லை - எதிரணியினரே தூண்டுகின்றனர் - ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாட்டில் அறிவார்ந்த அரசியல்வாதிகள் இல்லை - இலங்கை வாகன இறக்குமதியாள...
தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதால் அடுத்து வரும் சில தினங்களுக்கு அதிக மழையுடன...
|
|
|


