முச்சக்கர வண்டிகளின் மீற்றர் தொடர்பான சட்டமூலம் விரைவில்!
Saturday, September 3rd, 2016
நாட்டில் முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீற்றருக்காக நிலையான அமைப்பு முறை ஒன்று இல்லாமையினால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் கூறியுள்ளது.
இதன் காரணமாக பொது மக்களிடம் பணம் பெறும் போது மோசடிகள் இடம்பெறுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஆர். பல்லி கூறியுள்ளார். இந்த திட்டத்திற்காக அரசு கொண்டுவந்த சட்டமூலம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் நுவன் வணிகரட்னவிடம் அத தெரண வினவியதற்கு, இது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதனால், அந்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related posts:
யாழ்.குடாநாட்டைத் தாக்குமா கஜா? - குழப்பத்தில் மக்கள்!
இன்றுமுதல் தாபல் மூலம் வாக்களிப்பு விண்ணப்பங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு!
2023 பெப்ரவரியில் க.பொ.த சா/த பரீட்சை - தரம் ஒன்றிற்கு மாணவர்களைச் சேர்க்கும் சுற்றறிக்கையும் ஒரு வ...
|
|
|
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்காவிடம் இருந்து 4,700 பிசிஆர் கருவிகள் இலங்...
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளம் உரு...
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து நன்மைகளை...


