கடலட்டைப் பண்ணைகளை செழுமைப்படுத்து தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, April 20th, 2023

யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை செழுமைப்படுத்து  தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று  கலந்துரையாடினார்.

குறிப்பாக யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில்  அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை சிறப்பாக செயற்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடினார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டை பண்ணைகளை ஒழுங்கமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, சாத்தியமான பிரதேசங்களில் கடலட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கான அனுமதிகளை வழங்குதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106