சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார் – மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு!
Tuesday, April 11th, 2023
தாய்வானிற்கு அருகில் மூன்றுநாள் போர் ஒத்திகையை மேற்கொண்ட பின்னர் தான் மோதலொன்றிற்கு தயாராக உள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் தாய்வானை சுற்றிவளைக்கும் போர் ஒத்திகையில் ஈடுபட்ட சீன இராணுவம் போர் செய்வதற்கு தயார் என தெரிவித்துள்ளது.
படையினர் எந்நேரிடமும் போரிட தயாராக உள்ளனர் மேலும் எந்தவகையான தாய்வானின் சுதந்திர முயற்சியையும் வெளிநாட்டு தலையீடுகளையும் முறியடிப்பதற்காக எவ்வேளையிலும் அவர்களால் போரிட முடியும் என சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
கூட்டு வாள் என்ற பெயரில் சீன இராணுவம் இந்த ஒத்திகையை முன்னெடுத்திருந்தது. தாய்வானிற்கான எச்சரிக்கை என இந்த ஒத்திகையை முன்னதாக சீன இராணுவம் வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தென்கொரிய கப்பல் நிறுவனத்தின் சேவை முடக்கம்!
தமிழகத்தில்அசாராதண சூழல்: அடுத்து என்ன நடக்கும்?
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.90 கோடியை கடந்தது!
|
|
|


