எந்தவொரு தொலைபேசி உரையாடல்களும் பதிவுசெய்யப்படவில்லை – வதந்திகளுக்கு பாதுகாப்பு அமைச்சு பதில்!
Thursday, April 6th, 2023
நாட்டில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்யப்படுவதாகவும், வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. எனினும் இந்த செய்திகள் வெறும் வதந்திகள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு, இதுபோன்ற தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதோ, தொலைபேசி அழைப்புகளை சேமித்து வைப்பதோ அல்லது வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிப்பதோ இல்லை என பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.
எனவே சமூக ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிக மதுசாரம் அடங்கிய ஆயுர்வேத பொருட்கள் விற்கும் இடங்கள் மீது உடனடி சோதனை!
யாழ் மாவட்ட அரச அதிபர் பதவியில் இருக்கும்வரை மக்களுக்கும் நியாயமான தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை - ஜன...
இன்றுமுதல் அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையும் 20 முதல் 25 வீதம் வரை குறைப்பு -- அகில இலங்கை சிறு ...
|
|
|
நாட்டின் நிலைமைகள் குறித்து தீர்மானிக்க அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் கொழும்புக்கு வருமாறு அவசர அ...
வெளிநாடு செல்பவர்களிற்கு யாழ் போதனாவில் இலவச பிசிஆர் பரிசோதனை - பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெ...
வாரணாசி பகுதியில் வேட்பாளராக பிரதமர் மோடி அறிவிப்பு - உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய்...


