சுற்றுலாத்துறையூடாக 3 பில்லியனுக்கும் அதிக டொலரை வருமானமாக ஈட்ட முடியும் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை!
Saturday, March 25th, 2023
சுற்றுலா தொழில்துறை ஊடாக எதிர்காலத்தில் 3 பில்லியனுக்கும் அதிக டொலரை நாட்டின் பொருளாதாரத்திற்காக ஈட்ட எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வளர்ச்சியை காட்டுவதாக அந்த அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 2 இலட்சத்து 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்.
பெப்ரவரி மாதத்தில் ஒரு இலட்சத்து 522 பேர் நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இயற்கை அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தயார் - இடர்முகாமைத்துவ மத்திய நிலையம்!
தென்மராட்சியில் டெங்குத் தாக்கம் குறைவு - சுகாதாரத் திணைக்களம்!
சுகாதார வழிகாட்டலுக்கு முக்கியத்துவம் அளித்து புனித வெசக் தின நிகழ்வு!
|
|
|


