தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளைமறுதினம் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Tuesday, March 21st, 2023
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமா? இல்லையா? என்பது இறுதி தீர்மானத்தை எட்டுவதற்காக குறித்த ஆணைக்குழு கூடவுள்ளது.
இதற்காக சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்!
கார்பன் உரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இயலுமை எமக்கு உள்ளது - செவனகல சீனி உற்பத்தி நிறுவனத்தின் நிற...
23 வேட்பாளர்கள் மாயம்: தொலைபேசி இலக்கங்களும் போலியானவை -தேர்தல்கள் ஆணைக்குழு குமுறல்!
|
|
|


