பொலிஸார் வாங்கியது 600 ரூபா: சிறை மூன்று வருடங்கள்!
சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்த நபரிடம் இருந்து 600 ரூபாவை பலவந்தமாக பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபில்கள் இருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2012ம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி ஹபரன, கல்ஓய பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்த ஒருவரிடம் பலவந்தமாக பணம் பெற்றதாக, இரு சந்தேகநபர்களுக்கு எதிராகவும் சட்டமா அதிபரால், மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இன்று நீதிபதி தம்மிக்க கனேபொலவினால் குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் 3 வருடங்கள் சிறை மற்றும் 5000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
![]()
Related posts:
நீர் மின் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம்!
மதுபான நிறுவனங்களுக்கு வரிச்சலுகை இல்லை!
பிரதமரை அழைக்க திட்டமிடும் ஜனாதிபதி ஆணைக்குழு!
|
|
|


