அடுத்த வாரம்முதல் பாடசாலை மாணவர்களுக்கு குறைந்த விலையில் அப்பியாசக் கொப்பிகள் – கல்வி அமைச்சு தீர்மானம்!
Monday, March 6th, 2023
பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, பாடசாலை மாணவர்கள் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அப்பியாசக் கொப்பிகள் அடுத்த வாரம்முதல் நாடெங்குமுள்ள சதொச விற்பனை நிலையங்களில் வாங்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
32 ஆவது முதலமைச்சர்களின் மாநாடு காலியில்!
யாழ் மாநகரசபை பெண் அதிகாரி நிதி மோசடி: மூடிமறைக்க மாநகரசபை அதிகாரிகள் முயற்சி!
யாழ் - பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம்!
|
|
|


