ஜனவரிமுதல் இதுவரையில் ஒரு இலட்சத்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை !

Saturday, February 18th, 2023

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 230 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை, அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு நாளாந்தம் சுமார் 3,906 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு 54,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை 2022ஆம்ஆண்டு 47,282 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106