தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி!
Tuesday, February 7th, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், இந்த தீர்மானம் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல் ஆணைக்குழுவின் பதவி ஒருவர் விலகுவதால் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென ஏற்கனவே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மொத்த சனத்தொகையில் 17 வீதமானோர் புகைபிடிப்பவர்கள்!
பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்ஷா' காப்புறுதித் திட்டம்!
கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் எதிர்வரும் 04 ஆம் திகதி வர்த்தகர்களுடனான இறுதிக் கலந்துரையாடல் !
|
|
|


