தேர்தலுக்கு. 800 நிதி மில்லியன் தேவை – தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம்!

Thursday, January 26th, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தொடர் செலவீனமாக 800 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த கடிதம் நேற்று (25) நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் நடவடிக்கைகளுக்காக தொடர் செலவீனமாக 25 மில்லியன் ரூபா நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் பணிகளுக்காக இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு போதிய எரிபொருள் மற்றும் மின்சாரத்தை வழங்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழு மத்திய வங்கி ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு வளங்கள் இல்லை என்றால், அந்த வளங்களை வழங்காத நிறுவனங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106