இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி!
Tuesday, August 30th, 2016
நோர்வேயிலுள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது
நோர்வேயின் தெற்கு திசையில் உள்ள ஹர்டாங்கர் மலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி அங்குள்ள காட்டு மான்கள் உயிரிழந்தன. இச்செய்தி நேற்று காலை நோர்வே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. காட்டு மான்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, கொம்புகள் சிக்கிக்கொண்ட நிலையில் இறந்து கிடந்துள்ளன.
பலத்த மழை பெய்ததில் புயலும் வீசியுள்ளது. அதோடு மின்னல் தாக்கியதில் மான்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இயற்கை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது
Related posts:
சோமாலிய கடற்பகுதியில் நடவடிக்கைகளை குறைக்க ஜப்பான் கடற்படை யோசனை!
அதிக மன அழுத்தத்தால் அவதியுறும் விமானிகள் - ஆய்வில் தகவல்!
விமான நிலைய கட்டிடத்தில் மோதிய விமானம்: 10 பேர் பலி!
|
|
|


