நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் – சுவாச நோய் நிபுணர் சன்ன டி சில்வா அறிவுறுத்து!
Wednesday, December 14th, 2022
சுவாச நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் சன்ன டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இன்புளூவன்சா உள்ளிட்ட பல வைரஸ் நோய்களினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அவர், பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிரியாவில் நச்சுவாயுத் தாக்குதலால் பலர் பாதிப்பு!
தந்தையின் விபரீத முடிவு: ஆபத்தான நிலையில் பிள்ளைகள் - யாழ்ப்பாணத்தில் சோகம்!
வெயிலில் குடிதண்ணீர்ப் போத்தல்கள், மென்பானங்களை வைக்க வேண்டாம் - சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்!
|
|
|


