இணையத்தளத்தை முடக்கிய மற்றொருவரும் கைது!
Tuesday, August 30th, 2016
ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கிய குற்றச்சாட்டில் மொரட்டுவையைச் சேர்ந்த 27 வயது மற்றுமொரு நபரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அத்துமீறி நுழைந்தமைக்காக கடுகண்ணாவையைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.president.gov.lk எனும் இணையத்தளத்தை முடக்கி அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பில் அவதூறான செய்திகளை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இணைய குற்றங்கள் பிரிவுக்கு பொறுப்பான ஒரு விசேட குழு இவர்களைக் கைதுசெய்துள்ளது.
Related posts:
ரவிராஜ் வழக்கை ஜுரிகள் சபைக்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி!
மேலும் நான்கு புதிய ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப்பணங்களை செலுத்தினர்!
எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி கூடுகின்றது 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு!
|
|
|


