டிசெம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வை வழங்க முடியும் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Sunday, November 27th, 2022
டிசெம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு ஓரளவிலான தீர்வை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்நாட்டிற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி மருந்துப் பற்றாக்குறையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றமும் கிடையாது - நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
இலங்கையில் தொற்றா நோய்களினால் வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் உயிரிழப்பு!
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை - மூன்று வர்த்த நிலையங்களுக்கு அபராதம்!
|
|
|
தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக – எரிசக்தி அமைச்...
வடக்கு மாகாண ஆளுநர் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு – வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாட...
ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள உத்தேச சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிப...


