குவைத்தில் நிர்க்கதியான இருந்த 35 பெண்கள் நாடு திரும்பினர்!

Monday, August 29th, 2016

குவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் சென்று, அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் இலக்கான 35 பெண்கள் விஷேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.  இதேவேளை குறித்த பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் இலக்கான நிலையில், குவைத் தூதரகத்தில் இருந்த பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 1183 பேர் இவ்வாறு, குவைத் தூதரகத்தில் தங்கியிருந்த நிலையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts:


உலக அமைதி வேண்டி திருநெல்வேலி பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீருத்ர ஏகாதசனி மந்திரப்  ப...
பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாக கட்டியெழுப்பப்படுகின்ற பிராந்திய ஒத்துழைப்பு பயன்மிக்கதாக அமைய வேண்டும் – ...
எகிப்தில் நடைபெறும் ஐ.நாவின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!